சர்ச்சையை உருவாக்கியுள்ள சம்பூர் அனல்மின்நிலையம்!

ekuruvi-aiya8-X3

sampoor anal minசம்பூர் அனல்மின் நிலையம் அமைப்பது தொடர்பில் நாளுக்குநாள் சர்சைகளும் கண்டனங்களும் எழுந்தவண்ணமேயுள்ளன.

சம்பூரை வாழ்விடமாகக் கொண்ட தமிழ்மக்கள் அனல்மின் நிலையத்திற்கெதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் தற்பொழுது சிங்கள மக்களும் இதற்கெதிராக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதால், அனல்மின் நிலையத்திலிருந்து வெளிவரும் அமில வாயுவையும் சாம்பலையும் என்ன செய்யலாம் என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமும் இதுவரை இல்லையெனவும் இது சூழலுக்கு பாரிய பிரச்சனையைத் தோற்றுவிக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைவிட அபாயகரமாக நிலக்கரி எரிப்பின்போது இரசம் வெளியேற்றப்படும் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரசமானது உணவுக் கட்டமைப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரியவந்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தைவிட 12வீதம் விலைகுறைவான அனல் உள்ள நிலக்கரியே சம்பூர் அனல்மின் நிலையத்தில் பயன்படுத்துவதற்கு அராசங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலக்கரி எரிக்கப்படுவதனால் வெளியேறும் வாயுவானது நீராவியுடன் கலப்பதனால் அமிலமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதுதொடர்பாக மின்சக்தித்துறை அமைச்சர் சியம்பலாப்பிட்டிய கருத்துத் தெரிவிக்கும்போது, 2020இல் நாம் 400 மெகாவாற்ஸ் மின்சாரத்தை சேமிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக வருடாந்தம் 24இலட்சம் மெற்றிக்தொன் நிலக்கரி தேவைப்படும். அதனைக் கொள்வனவு செய்வதற்கு 65மில்லியன் ரூபா செலவாகும். இந்தப் பணம் அனைத்தும் மலேசியா, அவுஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் போய்ச் சேருகின்றது.

நாட்டின் மொத்தச் செலவில் 40வீதம் எரிபொருள் இறக்குமதிக்கே செலவாகின்றது. அதில் அரைப்பகுதி மின்சார உற்பத்திக்காக செலவிடப்படுவதாகத் தெரிவித்தார்.

இது இலாபகரமானது என மின்சக்தி அமைச்சர் கூறுகின்றபோதிலும் இதற்குரிய நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கு அதிகளவான பணம் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுவதாகவும் அவரே தெரிவிக்கின்றார். இது பொருளாதார ரீதியில் இலாபகரமானது இல்லையெனவும் அரசாங்கமே தெரிவிக்கின்றது. அப்படியிருக்கும்போது, அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட்டு இதற்கான மாற்றுத்திட்டம் ஒன்றினை ஏன்கொண்டுவரக்கூடாது என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்? இதற்கு மாற்றுவழியாக சூரியசக்தி மற்றும் காற்றின் வலு ஆகியவற்றைப் பயன்படுத்தி புதியதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்தமுடியும் எனவும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Share This Post

Post Comment