பசு வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி: சரத் யாதவ் குற்றச்சாட்டு

ekuruvi-aiya8-X3

sarat_yadavராஜஸ்தானில் பால் விவசாயி ஒருவர் பசு வன்முறையாளர்களால் தாக்கிக் கொல்லப்பட்டதற்கு ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில பால் விவசாயி கான் (35). இவரைப் பசு வன்முறையாளர்கள் கோவிந்த்கர் பகுதியில் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கான் பசுக்களைக் கடத்திச் செல்வதாக சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை அன்று கோவிந்த்கர் பகுதியில் கானின்சி தைக்கப்பட்ட உடல் கோவிந்த்கரின் ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டது.

இதற்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள சரத் யாதவ், ”பசுக்களையும் கன்றுகளையும் வேறிடத்துக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த கான் ராஜஸ்தானில் கொல்லப்பட்டுள்ளார்.

இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிர்ஷ்டவசமானது. இந்த மனிதத் தன்மையற்ற செயலால் விவசாயக் குடிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசாங்கம் தன் பணியில் தோற்றுவிட்டது” என்றார்.

Share This Post

Post Comment