இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட உத்தரவிடுவதாக மைத்திரி அறிவிப்பு!

Thermo-Care-Heating

maithiri545இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், இராணுவத்தினரிடம் பெற்றோரால் ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு தான் இராணுவத்தினருக்கு உத்தரவிடுவதாக ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்ட மைத்திரிபால சிறிசேன நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனோரின் உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது இன்று நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புக் கூட்டத்தில் படைத்தளபதிகளுக்கு தான் உத்தரவிடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.

எனினும் அந்தப் பட்டியலை எங்கு பெற முடியும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்காது நழுவிக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

”ஜனாதிபதியிடம் கூறுங்கள்’ மக்களின் குறைகளை நேரில் கேட்டறியும் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டபின்னர் ஒவ்வொரு மாதமும் வடமாகாணத்துக்கு பயணம் செய்யப்போவதாகக் கூறிய அவர் நேற்று முதற்தடவையாகப் பயணம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment