ஏசியான் மாநாட்டில் பங்கேற்கவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு

Modi-meets-US-President-Donald-Trump-பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 25-வது இந்தியா – ஏசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். ஏசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ள பிரதமர் மோடி, கிழக்கு ஆசிய நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில் அமெரிக்காவும், சீனாவும் தங்களது வர்த்தகத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது. அதற்கு இணையாக இந்தியாவும் தனது நல்லுறவை பலப்படுத்தி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏசியான் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்பை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லும் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.





Related News

  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
  • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
  • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
  • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
  • அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *