சாம்சங் போல் வெடித்துச் சிதறிய ஐபோன் 7 பிளஸ்

iPhone-7-Plus-Reportedly-Explodes_SECVPFசாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைலை தொடர்ந்து தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 7 பிளஸ் வெடித்துள்ள சம்பவம் அந்நிறுவன பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு சாம்சங் சந்தித்த அதே பிரச்சனையில் ஆப்பிள் சந்தித்துள்ளது. முன்னதாக சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்து சிதறியதை போல் இம்முறை ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனும் வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆப்பிள் வாடிக்கையாளர் இந்த தகவலை ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் வெடித்த ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளது.

பிரியானா ஒலிவாஸ் தனது ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன் சீராக இயங்கவில்லை என்பதால் ஆப்பிள் ஸ்டோரில் வழங்கியுள்ளார். இவரது ஐபோனினை சோதனை செய்த ஆப்பிள் ஸ்டோர் வல்லுநர்கள் ஸ்மார்ட்போனில் எவ்வித பிரச்சனையும் இல்லை என கூறி திரும்ப வழங்கிவிட்டதாக ஒலிவாஸ் தெரிவித்துள்ளார். ஒலிவாஸ் இந்த ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஜனவரி மாதம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

FFEF89A2-9546-467D-9DCD-C2104C6A7286_L_styvpf.gifஆப்பிள் ஸ்டோரில் இருந்து எடுத்து வந்ததும் தலையின் அருகே போனினை சார்ஜரில் வைத்து தூங்கி இருக்கிறார். பின் அவரது போனினை எடுத்து அறையில் இருக்கும் சிறிய மேஜையில் வைத்துள்ளனர். சிறிது நேரத்திலேயே அவரது ஸ்மார்ட்போனில் இருந்து அதிக சத்தம் ஏற்பட்டு, பின் தீ பற்றி கொண்டதாக ஒலிவாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் புத்தம் புதிய ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் இருந்து தீ புகை வெளியேறுவது தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவினை இதுவரை 1.26 மில்லினுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வெடித்து சிதறிய ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஸ்டோரில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஆப்பிள் வல்லுநர்கள் இந்த ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்து வருவதாகவும் ஒலிவாஸ் தெரிவித்துள்ளார்.


Related News

 • மொபைல்போன் உற்பத்தியில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கவும் வாய்ப்பு
 • யுவர் ஹவர் – ஸ்மார்ட்போனை கட்டுப்பாடுடன் பயன்படுத்த செயலி
 • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
 • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
 • 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் -ஆதார் ஆணையம் மறுப்பு
 • பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது
 • உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், பயனாளர்கள் அவதி
 • நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மை இல்லை என கூறும் மற்றொரு வீடியோ வெளியானது
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *