சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு தகுதி

saniya-rohan-300x125ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது.

கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்றில் சானியா, போபண்ணா ஜோடி, அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், ஜான் பியர்ஸ் ஜோடியை சந்தித்தது. 1 மணிநேரம் 13 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் இந்திய ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அவுஸ்திரேலியா ஜோடியை வென்று காலிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றது. காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி, பிரித்தானியாவின் ஹீத்தர் வாட்சன், ஆண்டி முரே ஜோடியுடன் மோதுகிறது.

முன்னதாக, ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் தொடரில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர்கள் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றினர். தற்போது கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ள சானியா, போபண்ணா ஜோடி பதக்கம் வெல்லும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Related News

 • அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை – பிரான்ஸ் கண்டனம்
 • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
 • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
 • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
 • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *