அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்ட அதிபர்கள் – ஆசிரியர் சங்கம் கண்டனம்!

Facebook Cover V02

teachersஉள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க பாடசாலை அதிபர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, ஆசிரியர்கள் சிலர் நேற்று முன்தினம் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பணி நிமித்தம் அவர்களை ஒன்றுகூட்ட வேண்டுமாயின் கல்வி அமைச்சிலோ அல்லது உயர் பாடசாலை ஒன்றிலோ மேற்கொண்டு இருக்கலாம். ஆனால், மாறாக அவர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டமையானது தேர்தல் ஒழுங்கு விதிமுறைகளை மீறும் செயல் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்த விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment