சம்பூரில் இன்று 177ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு!

ekuruvi-aiya8-X3

சம்பூரில் இராணுவத்தினரிடமிருந்த 177 ஏக்கர் காணி இன்று அதன் உரிமையாளர்களிடம் வழங்கப் பட்டுள்ளது.

சம்பூர் மகாவித்தியாலயத்தை உள்ளடக்கிய 177 ஏக்கர் காணியே உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விதுர கடற்படை முகாமும் இந்தப் பகுதியிலேயே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2006ஆம் ஆண்டிலிருந்து கடற்படையினர் வசம் இருந்த இம்முகாமானது மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாகவும் ஐநாவின் அழுத்தம் காராணமாகவும் இன்று உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.

காணி கையளிப்பு நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைசர், கிழக்கு மாகாண ஆளுனர், பாதுகாப்புச் செயலர் மற்றும் பல அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இவர்கள் காணி உரிமையாளர்களிடம் காணி அனுமதிப்பத்திரத்தை வழங்கியதோடு, சம்பூர் மகா வித்தியாலயமும் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

முகாம்களில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிய மக்கள் இன்று மகிழ்வுடன் தமது காணிகளைப் பெற்றுக்கொண்டமையை அவதானிக்கமுடிந்தது.

sampoor-land-release-2-e1458909615177 sampoor-land-release-3 sampoor-land-release-4 sampoor-land-release-6 sampoor-land-release-8

Share This Post

Post Comment