சாம்பியன்ஸ் தொடர்: இலங்கையை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

Facebook Cover V02

Champions-Trophy-Pakistan-Enters-to-semi-final-after-removeசாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

கார்டிஃப் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டிக்வெல்லா 73 (86) ரன்களும், மேத்யூஸ் 39 (54) ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் ஜுனைத் கான், ஹாசன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

237 ரன்களை இலக்காகக் கொண்டு களமிங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அஸார் அலி – பஃகார் சமான் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்திருந்த போது பஃகார் 50 (36) எடுத்து ஆட்டமிழந்தார். அஸார் அலி 34 (50) ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் வேகம் குறையத் தொடங்கியது.

இந்நிலையில், மலிங்கா வீசிய பந்தில் சர்பராஸ் கொடுத்த இருமுறை கேட்சு கொடுத்தார். ஆனால் அந்த இரு கேட்சுகளையும் இலங்கை அணி வீரர்கள் கோட்டை விட்டனர். அந்த அதிர்ஷ்டம் ஒரு பக்கம் இருக்க, பொறுப்புடன் விளையாடிய கேப்டன் சர்பராஸ் அகமது அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்பராஸ் 61 (79) ரன்களும் அமீர் 28 (43) ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 44.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி இலங்கையை வெளியேற்றி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

Share This Post

Post Comment