சம்பந்தனைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்

sampanthan-atul-2-1024x682தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் நேற்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பணியகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார். இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

எனினும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், அடுத்த வாரம் சிறிலங்கா தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.

Share This Post

Post Comment