நாங்கள் சமஷ்டி என்று தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது – சம்பந்தன்!

ekuruvi-aiya8-X3

sampanthanநாங்கள் சமஷ்டி என்று தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. எத்தனையோ உலக நாடுகளில் எந்தப் பெயரும் குறிப்பிடப்படாமல் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து புதிய அரசியலமைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தீர்வு வரலாம்; வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்படவேண்டும். இனிமேல் தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன.

நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம், பொது வாக்கெடுப்பில் வெற்றிபெறக்கூடிய சூழல் உருவாகக்கூடுமாயின் நாம் அச்சந்தர்ப்பத்தை நழுவவிடமுடியாது. நிதானமாக -பக்குவமாக வாயைப் பொத்திக்கொண்டு விடயங்களை நகர்த்தவேண்டும்.

அரசயிலமைப்புத் தொடர்பாக மகிந்தவுடன் பேசினேன். தமிழ் மக்களின் தீர்வுக்கு இந்தியாவிடம் பல உறுதிமொழிகளை வழங்கினீர்கள் எனத் தெரிவித்தேன். அதனை நீங்கள் செய்யவில்லையென்பதையும் கூறினேன். தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரும் பாரிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. இந்தியாவால் எங்களை கைவிடவும் முடியாது. கைவிடவும் மாட்டாது.

13ஆவது திருத்தச் சட்டத்தில் எமக்கு நம்பிக்கையில்லையாயினும் அதனை முற்றாக நிராகரிக்கமுடியாது. அது எமது இறுதித் தீர்வு இல்லை.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைவிடுவதாக அறிவித்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து நாம் எவ்வளவோ முன்னேறியுள்ளோம். புதிய அரசியலமைப்பில் நூறு வீதம் திருப்தியில்லையாயினும் அதில் எந்தளவோ முன்னேற்றமான விடயங்கள் உண்டு. தற்போது நாடாளுமன்றத்திற்கு வருவது இடைக்கால அறிக்கை மாத்திரமே.

சமஷ்டி என்று நாங்கள் சொற்களில் தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. உலகில் பல நாடுகளில் எந்தப் பெயரும் இல்லாமல் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதாகவும் நாம்கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

Share This Post

Post Comment