மகிந்தவும் நானும் இணைவோம் – சம்பந்தன்!

ekuruvi-aiya8-X3

Mahinda-Sudath-Silva-2014-budgetசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவும் நானும் இணைந்துஆட்சி செய்யவேண்டுமென விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்த கருத்தினை அவரது மகன் நமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.

கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவின் இந்த நிலைப்பாட்டை வரவேற்கிறேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோக பூர்வ தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார்.

அத்துடன், தனது தந்தையான மகிந்த ராஜபக்ஷ ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமது பிரச்சனைக்குத் தீர்வு காண அன்றும் இன்றும் தயாராக இருக்கின்றார் எனவும் பதிவிட்டுள்ளார்.

கடந்த 8ஆம் நாள் வினைச் சொற்களை விபரத்தில் என்ற நூல் வெளியீட்டு விழாவில், எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சிபுரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0-2

Share This Post

Post Comment