சம்பந்தன் தலைமையில் பிரம்மாண்டமாக ஆரம்பமானது ‘யொவுன்புர’ நிகழ்வு

ekuruvi-aiya8-X3

02-3தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ‘யொவுன்புர 2017′ எனும் மாபெரும் நிகழ்வு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை மெக்கெய்சர் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நேற்று ஆரம்பமான இந்திகழ்வில் உள்நாட்டைச் சேர்ந்த ஆறாயிரம் இளைஞர், யுவதிகளும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100 இளைஞர், யுவதிகளும் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பிரதானிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையுடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெறும் இந்நிகழ்வானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம்நாள் நிறைவடையவுள்ளது.

17629850_1495468640464577_1367402936649673681_n

Share This Post

Post Comment