யாழ். பல்கலைக்கழகத்தில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான ஆதரவுப் பேரணி

ekuruvi-aiya8-X3

14632515_779338228871928_1545592310_o-450x300யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் மலையக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான ஆதரவுப் பேரணி ஒன்று பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைக் குரல் எனும் தொனிப் பொருளில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக் கழக ஊழியர் சங்கமும் ஆதரவளித்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது அதிகரி அதிகரி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரி., சுரண்டாதே சுரண்டாதே தொழிலாளர்களை சுரண்டாதே , பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள விடயத்தினை அரசியல் ஆக்காதீர் போன்ற கோசங்களுடன் தொழிற் சங்கப் போராட்டங்களை அரசியல் ஆக்காதே , கம்பனிகளே தொழிலாளர்களிற்குரிய வேதணத்தை வழங்கு ,உயர்த்து உயர்த்து தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்து போன்ற கோசங்களுடன் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் பல்கலைக் கழக மாணவர் பீட பிரதிநிதிகள் பெருமளவான மாணவர்களுடன் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டப் பேரணியானது. பல்கலைக் கழக வளாக மையப் பகுதியில் ஆரம்பித்து பிரதான வாசல் வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment