சாமத்திய வீட்டு நேரடி ஒளிபரப்பு

கடந்த சில வாரங்களாக முகப்புத்தகங்களில் சாமத்திய வீட்டு நிகழ்வொன்றை, ஊடகம் என்று கூறப்படும் ஒருவரால் நேரடி வர்ணனை செய்யப்படும் காணொளி ஒன்று வைரலாக சமூகவலைத்தளங்களிலும், தமிழ் இணையதளங்களிலும் பரவிக்கொண்டிருந்தது.

சாமத்திய வீட்டில் சிறுமி நடந்துவரும் அழகு தொடக்கம் தாய் தந்தையர் அணிந்திருந்த உடை பரிமாறப்பட்ட உணவுவரை,  அனைத்தையுமே முகநூலில் நேரலை செய்திருந்தார் அந்தச் செய்தியாளர்.

இதை தமிழ் இணையதள ஊடகம் ஒன்று “உலகத் தமிழர்கள் பார்த்துப் பூரிக்கும் யாழ் சிறுமியின் கனேடிய சாமத்திய வீடு..!! (வீடியோ)அண்ணே!!!! அப்படியே கனடாவில கலியாணம் செய்யிற ஜோடிகளின் அன்றைய சம்பவங்களையும் இரவிரவாக வர்ணனை செய்யுங்கோ…. உலகத் தமிழர்கள் பார்த்துப் பூரிக்கும்படியாக அப்படியே இங்கேயும் பிரசுரிப்போம்….” என்று தனது பங்கிற்கு செய்தி பரப்பியிருந்தது.

இதில் இரண்டுவிடயங்களை நாம் கருத்தில் நோக்கலாம் முதலாவதாக சமாதியவிடு தேவையா? அது மிக பிரமணடமாக செயயும் சடங்கா அல்லது அது சம்பிரதாயமா?

இரண்டாவதாக சம்மதியவிடுகு ஊடக ஒளி, ஒலி பரப்பு தேவையா ? என்பதுதான் புலம்பெயர் சமூகத்தால் பேசப்படுபொருளாக இருக்கிறது

1) சமாதியவிடு தேவையா ?

ஒரு பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாரிய மாற்றத்துக்கு உள்ளாகும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் நிச்சயமாக இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

புலப்பெயர் நாடுகளில் மாற்றுஇனங்களுடன் சேர்ந்து வளர்ந்து விட்ட நிலையில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது? என்பது போன்றதன் கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ இதுவரை சரியான முறையில் புலம்பெயர் தேசங்களில் கிடைக்கவில்லை.

samathiyaveedyuகடனடாவில் உள்ள 40 தமிழ் குழந்தைகளிடம் ஒரு ஆய்வொன்றை நடத்தியபோது பெரும்பாலான பிள்ளைகள் தமக்கு இப்படியான சடங்குகளில் உடன்பாடில்லை என்றே தெரிவித்துள்ளார்கள் . பெற்றோரின் விருப்பதுக்காவே அவர்கள் இதை செய்வதாகவும் கூறிகின்றார்கள். அதேநேரம் பெற்றாரிடம் கேட்ட்டபோது பிள்ளை ஆசைபடுகிறார்கள் என்று நாசூக்கான பொய்யை கூறிச்சமாளிக்கின்றார்கள். கடைசியில் வீடியோ எடுப்பவர், புகைப்படம் எடுப்பவர் மற்றும் மண்டபக்காரர் சேர்ந்து சாமத்திய வீட்டை ஒரு கொண்டாட்டமாக செய்து கொடுக்கிறார்கள். எது எப்படியோ பத்து வருடத்துக்கு முன்னர், யுத்தகாலத்தில் இருந்த கனடிய தமிழர்களின் வாழக்கை பொருளாதார நிலையில் இருந்து தற்பொழுது தமிழ்ச் சமூகம் அபரீத வளர்ச்சி கண்டுள்ளது. எப்படி வளர்ச்சி பெற்றிருந்தாலும் குறுகிய சமூக கட்டமைப்புக்குள் வாழும் கனேடிய தமிழர்கள் தமது பொருளாதார வளர்ச்சியை படம் போட்டு காட்டுவதற்கும், இயந்திர வாழ்வாக ஓடி திரியும் நிலையில் சொந்த பந்தத்துடன் உறவை பேணி சந்தோசமாக இருப்பதற்காவும், மகளை அழகு படுத்தி பார்க்கும் ஒரு சந்தோசத்தை ஏற்ப்படுத்தி நிக்கும்   நிகழ்வாகவும் இது பதிவு செய்யப்படுகிறது.

இதில் பிரதான பங்கு வகிப்பது வர்த்தக புரட்சி மற்றும் விளம்பர உலகம். சாமத்திய வீடு சடங்குகில் தங்கி உள்ள பல வர்த்தக நிறுவனங்கள் தமது வியாபார விளம்பர உத்திகளை இவ்வகைச் சடங்குகளில் சேர்ப்பதினால் சாதாரண மக்களுக்கான சாமத்திய வீட்டுக்கு கவர்ச்சியாக அமைந்துள்ளது. புடவைக்கடை, புகைபிடிப்பாளர் ,விடியோபிடிப்பாளர் , மணடபம, உணவு பரிமாறும் நிலையங்கள், மல்லிகை பூ வியாபாரிகள் என்று இதில் தங்கியுள்ள வியாபாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். புதிய வர்த்தக உத்திகளும், புதிய சேவைகளும் தான் சமூகத்தின்  கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியளாக அமைந்துள்ளன.

இன்னும் பத்து வருடத்தில் சாமத்திய சடங்கு நிலைக்குமா? நிலாக்காதா? என்று கேட்டால் பதில் நிலைப்பதம் நிலைக்காததும் என்பது அக்காலத்தில் உள்ள சந்தைப்படுத்தலில்தான் தங்கியுள்ளது. சிலர் இப்போது இதை “சேலைச் சடங்கு(Saree Ceremony) என்றும் கூடக் கொண்டாடகிறார்கள். சேலைச் சடங்கானது மற்றய சமுகத்துக்கு நாம் கூறும் மரபு காரணம் மறைந்து, சேலைச் சடங்கு என்னும் புதிய வர்த்தக வடிவம் எடுக்கிறது எனலாம். சாமத்திய வீடு தேவையா இல்லையா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனாலும் உங்கள் மனங்களில் ஏதோ ஒரு மூலையில் நாம் விட்டு வந்த சமூகத்தையும் ,போரில் அழிந்த மக்களையும் மனதில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.அதே நேரம் கனடா போன்ற வளர்ந்த நாடுகளிலில் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் , , கல்வி , பாதுகாப்பு, பண்பாடு  போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள் .

சாமத்திய வீட்டுக்கு ஊடக ஒளி ஒலி பரப்பு தேவையா ?

இது மிகவும் சுவாரிசமானது. இரண்டு வருடத்துக்கு முன்னர் ஒரு நடன ஆசிரியர் தனது மகளின் பிறந்த நாள் நிகழ்வுக்கு தனது ஊடக நண்பர்களையும் அழைத்திருந்தார். என்னுடன் வந்த சில ஊடக நணபர்கள் தாம் கொண்டுவர வேண்டிய பரிசு பொதிக்கு பதிலாக தமது ஒளிப்படக் கருவியைக் கொண்டுவந்து சுற்றி சுற்றி புகைப் படமெடுத்து தமது ஊடகமூடாக வலைத்தளங்களில் பரப்பிவிட்டிருந்தார்கள். இதைத் தொடர்ந்து இன்னுமொரு சமூக புகழ்விரும்பி தனது மகளின் சாமத்திய வீட்டுக்கு ஊடகர்களை அழைத்து சமூகவலைத்தள செல்வாக்கைத் தேடியதைத் தொடர்ந்து, சமூகத்தில் ஒரு VIP நிலையை அடைய விரும்பும் சிலரும் இப்போது ஊடகர்களை அழைக்கத் தொடங்குகியிருக்கிறார்கள்.

இதிலும் அதே வர்த்தகப் புரட்சிதான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஊடகமும் ஒரு வியாபாரம் என்பதில் யாரும் மாற்றுக்கருத்து கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். வியாபாரம் என்று வந்து விட்டால் ஏதாவது மட்டுப்படுத்தப்படட வரைவிலக்கணம் இருகினறதா? என்றால் இல்லை. இனி வரும் ஊடகங்கள் சாம்மதியவீடு மட்டுமல்லாது அந்தச் செய்தியில் குறிப்பிட்ட்து போல முதலிரவுவரை போக ஆயத்தமாக இருக்கிறர்ர்கள்.  அப்படியான நேரடி ஒளிபரப்பு வந்தாலும் காலம் அதனையும் உள்வாங்கி முன்னேறும். அது தான் வர்த்தக மற்றும் வியாபார உலகம். ஊடக வியாபாரம் அந்த விளம்பரத்தை மேற்கொண்டு தமக்காண சேவை பெறுனர்களை அடைந்தே தீரும். அதீத  தொழில்நுற்ப வளர்ச்சியின் வேகத்தினால் பெரும் முதலீட்டில் உருவாக்கப்படும் ஊடகம் என்னும் கட்டமைப்பு இப்போது அன்றாடப் பாவனைப் பொருகளினூடு உள்ளங்ககைகளில் வந்துவிட்ட்து. அதே போல் ஊடக ஆசையுள்ள சாதாரண மக்கள் ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாக சமூகவலைத்தளங்கள், செல்பேசி மென்பொருட்கள் மூலம் ஊடக நிலையை அடைந்து விட்டார்கள். முழுநேரமாக ஒரு வியாபாரம் வைத்திருப்பவர்களோ, வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களோ சமூக அந்தஸ்திற்காக ஊடகத்தை இன்னொரு வியாபாரமாக ஒரு செல் போனோடு ஆரம்பிக்கலாம். வியாபார போட்டி சந்தை வாய்ப்பை திறந்து விட்டுள்ளது. மாற்றங்கள் பணமாற்று விகிதம்போல் தினம் தினம் மாற்றப் பட்டுக்கொண்டே இருக்கிறது.

ஆதலால் இனி வரும் காலங்களில் சமூகவலைதளங்கள், இணையதளங்கள் என்பன சாமத்திய வீடடையோ அல்லது பெயர் மாற்றப்பட்ட சேலைச் சடங்கு, திருமணங்கள், முதல் தடவையாக மது அருந்துவது போன்றவற்றை சர்வதேச படுத்துவது சாதரணமாக கடந்து போகும்.

 


Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *