சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது -மைத்திரிபால சிறிசேன

Facebook Cover V02

maithiri688சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

லால் விஜேநாயக்க தலைமையிலான புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளதோடு, குழுவின் பணிகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளது.

இந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி குறித்த விடயத்தை தெரிவித்ததாக குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை சிதறடிக்க சிலர் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனைப் பொருட்படுத்தாது பணிகளை அச்சமின்றி தொடரவேண்டுமென அவர் ஆலோசனை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமாதான மற்றும் நல்லிணக்கத்திற்கான முயற்சியின் ஒரு கட்டமே சகல மக்களும் சுதந்திரமாக வாழ வழிவகுக்கக்கூடிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு என ஜனாதிபதி தெரிவித்ததாக லால் விஜேநாயக்க கூறியுள்ளார்.

அரசியல் அமைப்பு சபை மக்களுக்கு ஏற்றவகையில் வெளிப்படையாகச் செயற்படவேண்டியது கட்டாயம் எனவும், கூச்சல் இடுபவர்கள் தொடர்பில் எவரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களே மக்கள் மத்தியில் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டுவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியதாக லால் விஜேநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment