சமாதானத்திற்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன – ஞானஸார தேரர்

ekuruvi-aiya8-X3

ganasaraசமாதானத்திற்கு எதிராக சில சக்திகள் செயற்பட்டு வருவதாக ஹூனுபிட்டிய கங்காராமய விஹாரையின் விஹாராதிபதி கல்பொட ஞானஸார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் காவல்துறை மா அதிபர் மற்றும் கடற்படைத் தளபதி தொடர்பில் எழுந்த சர்ச்சைகள் சில தரப்பினரின் திட்டமிட்ட சதி எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபர் மற்றும் கடற்படைத் தளபதி உள்ளிட்டவர்கள் தொடர்பில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது நாட்டின் அமைதி தன்மைக்கு குந்தகம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் சமூக சேவைகளை ஆற்ற முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபரும் கடற்படைத் தளபதியும் சீருடையின்றி இடங்களுக்குச் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share This Post

Post Comment