சமாதானத்தை நோக்கி நல்லாட்சி அரசு-சம்பந்தன்

sampantahnநல்லாட்சி அரசாங்கம் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம் அனைத்தையும் நிலைநிறுத்தி நாட்டை சமாதானத்தை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றது என இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

அத்துடன் நல்லிணக்கம்,ஜனநாயகம்,சுதந்திரத்தை வலுப்படுத்தல் மற்றும் தேசிய சமாதானத்தை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னோக்கி செல்லும் எனவும் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்

தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் நாட்டை ஓர் தெளிவான பார்வைக்கு இட்டுச் செல்ல வழிவகுத்து வருவதாகவும் நாடு தற்போது புதிய அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் செயல்பட்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.

Share This Post

Post Comment