சல்வார் கமீஸ் அணிந்து ஷாப்பிங் பையுடன் சசிகலா: சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புதிய வீடியோ

sasikalaசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளூர் ஊடகங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி வருகின்றன. சசிகலா கைதிக்கான உடையை அணியாமல் நைட்டியுடன் வலம் வரும் வீடியோ வெளியானது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் சசிகலா சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு ஷாப்பிங் பையுடன் சிறை வளாகத்தில் நடமாடுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவின் பின்னால் இளவரசியும் செல்வது அந்த காட்சியில் தெரிகிறது. சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் செல்வதாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

https://www.youtube.com/watch?v=kkyypZEVZ5I என்ற youtube தளத்தில் இந்த வீடியோவை காணலாம்.






Related News

  • தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை 6 மாதத்தில் மீட்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
  • முதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது – லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்
  • கங்கை நதி தூய்மையாகும் என்கிறார் நிதின் கட்கரி
  • முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா
  • ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?
  • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு
  • இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு
  • தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *