ஜிஎஸ்பி வரிச் சலுகையை மீள வழங்குவதற்கு சிறிலங்காவுக்கு 16 நிபந்தனைகள்

ekuruvi-aiya8-X3

un3535சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச் சலுகையை மீள வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் 16 நிபந்தனைகளை விதித்துள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜிஎஸ்பி வரிச் சலுகையை சிறிலங்காவுக்கு மீண்டும் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 56 நிபந்தனைகளை விதித்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின. எனினும், சிறிலங்கா அரசாங்கமும், ஐரோப்பிய ஒன்றியமும் அதனை நிராகரித்திருந்தன.

இந்த நிலையில், ஜிஎஸ்பி வரிச் சலுகையை மீள வழங்குவதற்கு சிறிலங்காவிடம் ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த 56 நிபந்தனைகள் தற்போது 16 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீளப்பெறும் நடவடிக்கை மிகவும் நெருங்கியுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் இதுபற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment