பாக். ராணுவத்தை கண்டித்து சாலையில் அந்நாட்டின் தேசியக் கொடி வரைந்து போராட்டம்

ekuruvi-aiya8-X3

Residents-in-Gujarats-Anand-painted-Pak-flag-on-a-roadகாஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே சில நாட்களுக்கு முன்னர் இந்திய வீரர்கள் இருவர் பாகிஸ்தான் ராணுவத்தால் உடல் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பிய இந்த சம்பவத்திற்கு இந்தியா சார்பில் பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களில் சிலர் சாலையில் பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியை வரைந்து அதன் மீது நின்று அந்நாட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி சாலையில் வெள்ளை பெயிண்ட் அடித்து தேசியக் கொடி அடையாளத்தை அழித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Post

Post Comment