ரக்‌ஷாபந்தன் கொண்டாட சகோதரியை காணச் சென்றவர் ரெயிலில் தவறி விழுந்து பலி

ekuruvi-aiya8-X3

Man-going-to-meet-sister-for-Raksha-Bandhan-run-over-இந்தியாவின் வட மாநிலங்களில் ரக்‌ஷாபந்தன் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாளில் தனது சகோதரன் நலமுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி அவருடன் பிறந்த சகோதரிகள் கையில் ராக்கி கட்டி விடுவார்கள். ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு, அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்து சகோதரர்கள் மகிழ்வார்கள்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்தர் குமார் என்பவர் தனது சகோதரி உடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாட நேற்று ஹரியானா மாநிலம் சென்றுள்ளார். இதையடுத்து, இரவு பானிபட் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் ரெயிலானது ஒரு ரெயில்நிலையத்தில் நின்றுள்ளது.

அப்போது ராஜேந்தர் குமார் கடையில் ஏதோ வாங்குவதற்காக இறங்கினார். அவர் வருவதற்குள் ரெயில் புறப்பட்டதால் ஓடும் ரெயிலில் ராஜேந்தர் ஏற முயன்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேந்தர் மீது ரெயில் ஏறியதில் அவர் சம்வ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜேந்தர் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சகோதரி உடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாட வந்த போது சகோதரர் பலியான சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Post

Post Comment