சைத்தியவை திறந்துவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…

ekuruvi-aiya8-X3

maithry2-450x220பாலின்த நுவர, பெலேந்த ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சைத்தியவை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வு நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

பெலேந்த ரஜமகா விகாரைக்கு வருகைதந்த ஜனாதிபதி சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர் நாயக்க தேரரைச்; சந்தித்து அவரது சுகதுக்கங்களைக் கேட்டறிந்தார்.

இந்த புண்ணிய நிகழ்வை நினைவுகூறுமுகமாக விகாரை பூமியில் சந்தன மரக்கன்று ஒன்றையும் ஜனாதிபதி நட்டினார். மேலும் வீதியபண்டார இளவரசரினால் பயன்படுத்தப்பட்ட பண்டைய ஆயுதங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இந்த நிகழ்வுக்கு கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ஸ்ரீ தர்மமகா சங்கசபையின் மகாநாயக்க தேரர் கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார தேரரும் பெலேந்த ராஜமகாவிகாரையின் விகாராதிபதி தேவமுல்லே கல்யானவங்ச நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர் ராஜித்த சேனாரத்த, மேல்மாகாண அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் பொலன்னறுவை லக்ஷஉயன கனிஷ்ட வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபரான பீட்டன் கம எதிகேயின் வீட்டுக்குச் சென்று அவரது சுகதுக்கங்களைக் கேட்டறிந்தார்.

பினாராம மாவத்த பதுரலிய பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற அதிபர் பீட்டன் சேவை செய்த கல்லூரியின் ஆசிரியர் குளாமில் ஜனாதிபதியின் பாரியாரும் சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment