30 வருட பழமையான சட்டத்தை உடைத்தெறிந்தமை எமது இரண்டாவது வெற்றி – மனோகணேசன்!

Thermo-Care-Heating

Mano-Ganesan-01-720x450பெருந்தோட்டப் பிரதேசங்களில் வாழும் மக்கள் பிரதேச சபைகளுக்கு வாக்களிக்கமுடியும். ஆனால் பிரதேச சபைகளால் தோட்டப் பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி செய்யமுடியாது என்ற 30 வருடம் பழமையான சட்டத்தை உடைத்தெறிந்தமை தமது இரண்டாவது வெற்றியென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், குறித்த 30 வருட பழமையான சட்டமானது, தற்போது நமது வலியுறுத்தலின் படி மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் முஸ்தபா இந்த மாற்றத்தை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

1987ம் வருடத்தின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33ம் பிரிவு இதன் மூலம் திருத்தப்படுகிறது. இதையடுத்து இது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

இவ்விவகாரம் எமது காத்திரமான முன்னெடுப்புக்களில் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment