அமெரிக்காவின் பொருளாதார தடை ஏற்றுக்கொள்ள முடியாதது – ரஷ்யா கருத்து

Facebook Cover V02
Trump-0908இங்கிலாந்தில்  உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோவிசோக் எனும் நச்சுப்பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தீர்மானிக்கப்பட்டபிறகு ரஷ்யா மீது தாங்கள் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா கடந்த மார்ச் மாதத்தில் சாலிஸ்பர்ரி நகரில் நினைவிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் பல வாரங்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப்பின் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணமென்று ஒரு பிரிட்டன் புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா கடுமையாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா மீது தடைகள் விதிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா செயல்படுத்தவுள்ளதாக அந்நாட்டு அரசுத்துறை உறுதி செய்துள்ளது. சர்வதேச சட்டத்துக்கு புறம்பாக ரசாயன அல்லது உயிரியல் ரீதியான ஆயுதங்களை தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக அந்த நாடு பயன்படுத்தியுள்ளது” என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டின் செய்தி தொடரபாளர் ஹீதர் நாரெட் தெரிவித்தார்.
ரஷ்யா மீது அமெரிக்கா விதிக்கவுள்ள புதிய தடைகள் ஏறக்குறைய ஆகஸ்ட் 22-ஆம் தேதியில் பிறப்பிக்கப்படலாம். முக்கிய மின்னணு சாதனங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் தொடர்பான ஏற்றுமதிகள் இந்த புதிய தடைகளில் அடங்கும்.  அமெரிக்காவில் உள்ள ரஷிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ரஷியா மீது கூறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து  அரசு வரவேற்று இருந்தது.
அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள ரஷ்யா, பிரிட்டனில் உளவு அதிகாரி மீது இரசாயன தாக்குதல் நடத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக  அமெரிக்கா பொருளாதார தடை விதித்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனினும், அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான  உறவு தொடரும் இன்னும் நம்புவதாக தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment