ரஷ்ய- இத்தாலி பிரதமர்கள் சந்திப்பு

ரஷ்ய பிரதமர் டெமிட்டி மெட்வெடவ் மற்றும் இத்தாலி பிரதமர் கியூசெபே கொன்டேயிற்கும் இடையிலான சந்திப்பொன்று  இடம்பெற்றுள்ளது.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இன்று (புதன்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவிற்கும் இத்தாலிக்கும் இடையிலான முறுகல்நிலை காணப்படும் வேளையில், இரு நாட்டுப் பிரதமர்களும் சந்தித்துக் கொண்டுள்ளமை முக்கிய விடயமாக கருதப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பிரச்சினைகளைக் குறைக்கும் எண்ணத்திலிருக்கும் இத்தாலிய அரசாங்கம் ரஷ்யாவுடனான சுமூகமான உறவை நாடி நிற்கின்றது.

கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரேன் விவகாரத்திலும் இத்தாலிய வர்த்தக நிலையங்கள் முடக்கப்பட்ட காரணங்களினாலேயே ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இத்தாலியும் முறுகல் நிலைக்கு உள்ளாயின.

மேலும், இத்தாலிய பிரதமர் கியூசெபே கொன்டே, இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Related News

  • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
  • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
  • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
  • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *