மனித உரிமை செயற்பாட்டாளரின் உரை நாளை

மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னான்டோ, நாளை (வியாழக்கிழமை) யாழ்.பல்கலைக்கழகத்தில் முக்கியமான ஆளுமை தொடர்பில் உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தனது மனித உரிமை பணிகளுக்காக 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அருட்பணி பிரவீன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் போராட்ட செயற்பாட்டாளர் ஜெயக்குமாரி ஆகியோருடன் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் மீதான நியாயங்களை வலியுறுத்தி சர்வதேச அழுத்தத்தின் மத்தியில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில்  நாளை இடம்பெறவுள்ள ருக்கி பெர்னான்டோவின் உரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்குமென கல்விமான்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யுத்தம் இடம்பெற்ற காலங்களில் வடக்கு கிழக்கில் மனித உரிமைகளுக்காக முன்நின்று செயலாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Related News

  • எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை
  • ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்
  • ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி
  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *