Rouge Park இல் Progressive Conservative கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக Shean Sinnarajah அவர்களின் தொடக்க நிகழ்வு ( காணொளி மற்றும் புகைப்படங்கள் )

நிகழ்வின் புகைப்படங்களை பாரவியிட

http://images.biztha.com/Toronto-2016/Shean-Sinnarajahs-Nomination/

Scarborough Rouge Park தொகுதியில் Progressive Conservative கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக Shean Sinnarajah அறிகுவித்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை 18 நவம்பர் 2016 அன்று நடந்த அவரது அங்குராப்பண நிகழ்வில் அவர் தெரிவிக்கையில்

நான் 1996ம் ஆண்டு கனடாவிற்கு ஒரு அகதியாக வந்தது முதல், ஸ்காபுறோ றூஜ் பார்க் சமூகத்திலேயே வாழ்ந்து வருகிறேன். இந்த சமூகம் தான் என்னை ஆதரித்து, பாதுகாப்பாகவும் அதேசமயம் சமூகத்தில் ஒருவனாகவும் அங்கீகரித்தது. நான் இதே சமூகத்தில்தான் வளர்ந்து,
வாழ்ந்து பணியாற்றி வருகின்றேன். றூஜ் பார்க் சமூகத்துடனான எனது பிணைப்புத்தான் நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம். உறுதியான, பெருமையான ஒரு தனி மனிதனாக நான் இன்று எனது சமூகத்திற்கு பங்களிப்பை ஆற்றுவதற்கும், றூஜ் பார்க்கிற்காக
குரல் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறேன். என்று தெரிவித்தார்

அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில் Patrick Brown அவர்களின் தொலைநோக்குப் பார்வைதான், எனது பிரச்சாரத்திற்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது. இந்த Rouge Park தொகுதிக்கு, Conservative கட்சியே மிகச் சரியான தெரிவு.

எமது மனங்களில் மிகவும் நெருக்கமாகவுள்ள இந்த சமூகத்தின்தேவைகளை அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் சேவையாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

உங்கள் அனைவரது ஆதரவுடன், எங்களது குரல்களை நிச்சயமாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு கேட்கச் செய்யலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.


றூஜ் பார்க் தொகுதிக்கு இன்னும் பல விடயங்கள் தேவையாக இருக்கின்றன. முதியோர்
பராமரிப்பு, இளையோர் முன்னேற்றம், போக்குவரத்து போன்றவற்றிற்கும், இயற்கை வளங்களைப் பராமரிப்பதற்கும் மேலதிக நிதி தேவைப்படுகின்றது. இந்த சமூகத்தில் பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவருமே பாதுகாப்பாகவும், அவர்களது இலக்குகளை நிறைவேற்றும் வகையிலும் அவர்களுக்கான உதவிகளை வழங்குவது முக்கியமாகவுள்ளது. அந்த வகையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் நீங்கள் அனைவருமே எப்போது வேண்டுமானாலும் அணுகும் வகையிலான ஒரு வேட்பாளராக நான் இருப்பேன். உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் தயாராகவுள்ளேன்.

நான் இந்த சந்தரப்பத்தைப் பயன்படுத்தி, இங்கே வருகை தந்து எனக்கு ஆதரவளித்த எனது
ஆதரவாளர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்குமே மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாம் அடைய விரும்பும் இலக்குகளை உங்களுடைய ஆதரவின்றி எம்மால் அடைய முடியாது. அந்த வகையில் நீங்கள் வழங்கும் ஆதரவிற்கு நான் எப்போதுமே நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்.






Related News

  • மிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன
  • கஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்
  • அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு
  • வின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
  • மிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
  • கனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்
  • ஒட்டாவாவில் குளிர் காலநிலை ஆரம்பம்
  • விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் – ஹமில்டன் இளைஞன் கைது
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *