மும்பை நடைபாதை வாசிகளின் பசிப்பிணியை போக்கும் உணவு வங்கி

roti_bankசாலையோரத்தில் ஆதரவின்றி வசிப்போர், மூன்று வேளை உணவு கிடைக்காமல் அல்லல்படுவது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நம்மில் அநேகம் பேர் இந்த அறிதலோடும், அனுதாபப்படுவதோடும் நின்றுவிடுவோம்.

ஆனால், மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி டி.சிவாநந்தன் அனுதாபத்தோடு ஒதுங்கிவிடாமல் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கினால் என்ன… என்ற கண்ணோட்டத்தில் தீவிரமாக சிந்தித்து தொடங்கியதுதான் இந்த உணவு வங்கி.

பிரபல உணவகம் ஒன்றுடன் இணைந்து சிவாநந்தன் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த உணவு வங்கி தற்போது உணவு மீட்பு அமைப்பை போன்று செயல்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள உணவங்கள், உணவு விடுதிகளில் தினந்தோறும் மீதமாகும் உணவுப் பொருட்களை சேகரித்து பசியால் வாடுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் சேவையை குழுவாக செய்து வருகிறார்கள்.

ரொட்டி, அரிசி, சாம்பார் மற்றும் காய்கறி வகைகள் கெட்டுப்போவதை தடுக்கும் விதமாக அவை சேகரிக்கப்பட்ட 60 முதல் 90 நிமிடங்களுக்குள்ளாக நடைபாதை வாசிகளின் பசிப்பிணியை போக்க வழங்கப்பட்டுவிடுகிறது.

மேலும், மருத்துவமனை மற்றும் குடிசைப்பகுதிகளின் நடைபாதையில் உள்ள உணவு இல்லாதாவர்களுக்கு விரைந்து உணவு வழங்குவதற்காக ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தப்பட்ட இரண்டு வேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வேலை நாட்களில் 300 முதல் 400 நபர்களுக்கும், விடுமுறை தினத்தன்று 700 முதல் 800 நபர்களுக்கும் இவர்கள் உதவி செய்துவருகிறார்கள். இதுவரை மாநகர் முழுதும் 75 ஆயிரம் பேர் இந்த உணவு வங்கியினால் பயனடைந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய சிவாநந்தன், ’ நாட்டில் 20 கோடி ஏழைகள் பட்டினியாக உறங்குகின்றனர், சுமார் 2 லட்சம் கோடி டன் உணவு வீணாகிறது. இதை பற்றி யோசிக்கையில் உணவை வீணடிப்பவர்களுக்கும் உணவு தேவைபடுபவர்களுக்கும் இடையே இணைப்பை உருவாக்கிய சென்னையை சேர்ந்த ’நோ புட் வேஸ்ட்’ திட்டத்தை பார்த்த பின்னர் உணவு வங்கி தொடங்க வேண்டும் எண்ணம் ஏற்பட்டது.

நாம் வசிக்கும் நகரங்களில் இரண்டு வகையான மக்கள் உள்ளனர். ஒரு தரப்பினர் உணவங்களில் உணவை வீணடிக்கின்றனர். மற்றொரு தரப்பினர் ஒரு வேலை உண்ணவே உணவில்லாமல் காய்ந்த வயிற்றுடன் உறங்க செல்கிறார்கள். இந்த இரண்டு வகையான மக்களுக்கும் இடையே ஒரு பாலத்தை போன்று நாங்கள் செயல்பட்டு வருகிறோம்’ என தெரிவித்தார்.






Related News

  • ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமணம்
  • 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு
  • புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
  • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
  • நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி
  • நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
  • படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்
  • உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *