நிறுத்தப்படுமா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்?

ekuruvi-aiya8-X3

RK_nagar18ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி நெருங்க, நெருங்க பரபரப்பும் அதிகமாகி இருக்கிறது. இன்று, ஒரு நாளில் மட்டும், தொகுதியில் இருக்கும் இரண்டு லட்சம் வாக்காளர்களுக்கும், சுமார் 6 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டதாக, தினகரன் மற்றும் தி.மு.க., தரப்பினர், தேர்தல் கமிஷனிடம் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர்.

போலீஸ், துணை ராணுவப்படைக்கு சவால்

தொகுதியின் பல்வேறு இடங்களிலும், சாலை மறியல் போராட்டங்களையும் நடத்தி, போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு சவாலான காரியங்களை செய்து வருகின்றனர். தி.மு.க., சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராகேஷ் லக்கானி மற்றும் தேர்தல் சிறப்பு அதிகாரி பாத்ராவைப் பார்த்து கொடுக்கப்பட்ட புகார் மனுவோடு, அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்தது தொடர்பான சில ஆதாரங்களையும் கொடுத்துள்ளதால், அதையெல்லாம் வைத்து, மீண்டும் ஒரு முறை, தேர்தலை நிறுத்துவது தொடர்பாக தீவிர ஆலோசனையை தேர்தல் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, மத்திய தலைமை தேர்தல் ஆணையாளர் அலுவலகத்துக்கும், தமிழகத்தில் இருந்து தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அங்கும், விசாரணை தீவிரமாகி உள்ளதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதாக எந்த நேரமும் அறிவிப்பு வரலாம் என, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment