மானிப்பாயிலிருந்து கனடா வந்து கோடிஸ்வரனான படிக்காதவன்

Facebook Cover V02

திரு இராஜீவகரன் முத்துராமன்.  அதிநவீன அச்சுயந்திரங்களை கொண்டுள்ளது RJ
Multi-Litho  என்ற அச்சுக் கூடத்தின் நிறுவனர்.  பல மில்லியன் டொலர்கள்
பெறுமதியான  . இரண்டு பெரிய கட்டிடத் தொகுதிகள் உண்டு. படித்தது பத்தாம்
வகுப்பு மட்டுமே. அந்தக் குறையை ஈடுசெய்யத் தன்னைச் சுற்றிப்  படித்தவர்களை,
துறைசார் விற்பன்னர்களை தன்னோடு வைத்திருப்பதாகச் சொல்கிறார். தனக்கு
குளியல் அறையைத் தூய்மைப் படுத்தும் தொழிலிருந்து எல்லா வேலையும் அத்துப்படி

என்கிறார். குப்பையில் இருந்து கோபுரத்துக்கு.. என்ற மறுசுழற்சி முறையை வெறும்
பேச்சாக இல்லாமல் உண்மையாகவே எண்பித்துக் காட்டியுள்ளார். தொடக்கம் ஒரு
சிறிய வாடகை அறை. தனது 41 அகவையில் இந்தத் தொழிலைத் தொடங்கியதாக
சொன்னார்.  இவருக்குரிய புதிய வெளிச்சம் Best Leadership Award விருதை
HomeLife/Future Reality Inc. Brokerage நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.


மருதடியானின் தேர் உலா வரும் மானிப்பாய் தான் இவரின் புர்வீகம்.

வெற்றி மனிதர்கள் பலரை உருவாக்கிய மானிப்பாய் மண் தனது மகுடத்தில் சூடி மகிழ்வதற்கு பொருத்தமான ஒரு முத்து முத்துராமன் தம்பதியர் பெற்றெடுத்த சொத்து

மனிதர்களே சக மனிதர்களை நேசியுங்கள் வாழும் காலத்தின் ஒவ்வவொரு நொடிப் பொழுதையும் ஆனந்தமாக மாற்றுங்கள் இதுவே உங்கள் பிறவியின் பெரும் பயம் என்பதை உளமார நம்பும் மனிதர்.

தன்னை சுற்றியிருக்கும் சகமனிதர்கள் மீது ஈரம் காயாதா நேசத்தை எப்போதும் வைத்திருப்பது எல்லோராலும் முடிவதில்லை. ஆனால் இவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களை எப்போதும் தன்னைப் போலவே மகிழ்வோடு வைத்திருக்க  முனைபவர்.

வெற்றிபெற வேண்டும் என்று நெஞ்சார நம்புங்கள் அந்த வெற்றி உங்களை தேடி வரும் என்ற வாழ்வின் இரகசியத்தை தனது வாழ்கையின் மூலம் நிரூபித்து வருபவர்.

கணிதத்தை தவிர எதுவும் கைவராத ஒரு மாணவனாக தாய் மண்ணில் இருந்து வெளியேறிய ஒருவர் தனக்கு கைவந்த கணித்தை மட்டும் நம்பி ஒரு வரத்தக சாம்ராஜ்ய்தை கனேடிய மண்ணில் உருவாக்கியிருக்கின்றார்.

80 களில் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவராக இந்த மண்ணில் வந்து வீழ்ந்தாலும் அவர் தன்னோடு சுமந்து வந்த கனவுகளை ஒருபோதும் தொலைத்து விடவில்லை.

கனேடிய மண்ணில் தமிழர்களின் பெயர் சொல்லும் பெரும் அச்சகம்  ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பெருங்கனவினை நனவாக்கும் முயற்சிகளை சிறிது சிறிதாக தொடங்கினார்.

சிறிய வாடகை அறையில் தொடங்கிய முயற்சி இன்று சொந்தமாக இரண்டு மிகப் பெரிய கட்டிட தொகுதிகைளையும் பல மில்லியன் டொலர் பெறுமதி கொண்ட அச்சு இயந்திரங்கள் பலவற்றை கொண்டுள்ள அச்சகத்தின் சொந்தக்காரராக அவரை மாற்றியிருக்கின்றது.

25 ஆண்டுகால வெற்றியை எட்டித் தொடும் தூரத்தில் உள்ள RJ Multi Litho என்ற இவருடை நிறுவனம் பலமில்லியன் டொலர்கள் பெறுமதி கொண்ட அதி நவீன அச்சு இயந்திரங்களை கொண்டுள்ளது.

கனடாவின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்கள், நகரசபைகள் கல்விச் சபைகள் போன்றவற்றினை தனது வாடிக்கையாளர்களாக கொண்டிருக்கின்றது.

நட்பின் மிதும் உன்னதமான உறவுகள் மீதும் அவருக்கு எப்போதும் நெருக்கம் அதிகம். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தொடரும் நட்பு குறித்து அவரின் நெருங்கிய தோழனிடம் பேசிய போது…………..

வாழ்கையில் தனது இலட்சியத்திற்கு குறுக்கே எதனையும் வரவிடாமல் தடுத்து குடும்பத்தின் பாரத்தை முழுவதுமாக சுமக்கும் தனது மனைவியின் தியாகத்திற்கு தனது கண்ணீரை தவிர வேறெதனையும் தந்துவிடமுடியாது என்கின்றார்.

தனது உழைப்பின் கணிசமான பகுதியை தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கனேடிய சமூகத்திற்கும் தருவதில் மன நிறைவு காணும் இவர் சமூகத்திற்கு கொடுப்பதன் அவசியத்தை எமக்கு உணர்த்துவதில் எப்போதும் முன்னிற்கின்றார்.

சிறப்பான திட்டமிடல், உயர்வான நிர்வாகத்திறன், தெளிவான தொலைதூர நோக்கு என வர்த்தக முயற்சியின் வெற்றிக்கான படி நிலைகளை தெளிவாக புரிந்து அதன் படி நடந்தால் நீங்களும் நாளை வெற்றியாளராக முடியும் என்ற நம்பிக்கையினை எமக்கு தந்து நிற்கும் RJ Multi Litho நிறுவனத்தின் அதிபர் Rajeekaran Muthuramn அவர்களுக்கு சிறந்த தலைமைத்துவப் பண்பிற்கான விருதினை வழங்கி கௌரவிப்பதில் ஈ.குருவி பேரானந்தம் கொள்கின்றது.

HomeLife/Future Realty Inc., Brokerage*

ekuruvi-night-2018-chandran (290)-X3 ekuruvi-232-X3 ekuruvi-200-X3 ekuruvi-199-X3 ekuruvi-198-X3 ekuruvi-196-X3 ekuruvi-194-X3 ekuruvi-193-X3

ekuruvi night 2018
ekuruvi night 2018

 

 

sdsd

 

 

Share This Post

Post Comment