ஏழை குழந்தைகளுக்காக 9 பள்ளிகளை திறந்த ரிக்ஷாதொழிலாளி

ekuruvi-aiya8-X3

rikshaw-2603அசாம் மாநிலத்தில் ரிக்ஷா தொழிலாளி ஒருவர் ஏழை குழந்தைகளுக்கு 9 பள்ளிகளை திறந்து வைத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.

அசாம் மாநிலத்தில் பா.ஜ., தலைமையிலான ஆட்சியில் சர்பானந்தா சோனவால் முதல்வராக உள்ளார். இங்குள்ள கரீம்கஞ்சு மாவட்டத்தை சேர்ந்தவர் அகமது அலி இவர் ரிக்ஷா ஓட்டுனர். இவர் குடும்ப சூழ்நிலையால் கல்வி பயில முடியாமல் இளம் வயதிலேயே ரிக்ஷா ஓட்டத் துவங்கினார். கல்வி மீது இவருக்கு தீராக தாகத்தால், எந்த ஒரு ஏழை குழந்தையும் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணிய இவர், ஏழை குழந்தைகளுக்காக பள்ளியை கட்ட முடிவு செய்தார். ஆனால் அவரிடம் பள்ளி கட்டும் அளவிற்கு போதிய பணமில்லாமல், தனது சொந்த நிலத்தை விற்று, மேலும் கிராம மக்களிடம் இருந்து பணம் சேகரித்தார்.

இறுதியாக, 1978ம் ஆண்டு முதன் முறையாக ஏழை குழந்தைகளுக்காக ஒரு பள்ளிகூடத்தை திறந்தார். இப்படி கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் தனது பகுதியில் 9 பள்ளிகளை திறந்து வைத்துள்ளார்.இவர் 3 ஆரம்ப பள்ளிகளையும், 5 ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் நடுநிலை பள்ளிகளையும், ஒரு உயர்நிலைப்பள்ளிகளையும் கட்டி உள்ளார். விரைவில் ஒரு கல்லூரியும் கட்ட இருக்கிறார்.

இது குறித்து அகமது கூறுகையில்,படிப்பறிவின்மை எந்த ஒரு சமூகத்திற்கும் சாபக்கேடு. இதனால் வாழ்வதற்கான ஆதாரமே இல்லாமல் போகும். மேலும் பள்ளியில் பயிலும் குழந்தைகள் நன்றாக படித்து வாழ்க்கை தரம் உயருவதே எனக்கு திருப்தி. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment