ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

ekuruvi-aiya8-X3

mukesh_ambaniரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர், முகேஷ் அம்பானியின் குடும்பம், ஆசிய பணக்கார குடும்பங்கள் பட்டியலில், முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்தாண்டுக்கான, ‘ஆசியாவின், 50 பணக்கார குடும்பங்கள்’ பட்டியலை, ‘போர்ப்ஸ்’ இதழ் வெளியிட்டு உள்ளது. அதில், முகேஷ் அம்பானி குடும்பம், 4,480 கோடி டாலர் சொத்து மதிப்புடன், முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு, முதலிடத்தில் இருந்த, தென் கொரியாவின், சாம்சங் குழும தலைவர், லீ குன் ஹீ குடும்பம், 4,080 கோடி டாலருடன், இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. அடுத்த இடங்களில், ஹாங்காங்கின், க்வோக் குடும்பம், தாய்லாந்தின், செராவனன்ட் குடும்பம் ஆகியவை உள்ளன.

ஆசியாவின், ‘டாப் – 10’ பணக்கார குடும்பங்களில், முகேஷ் அம்பானியின் குடும்பம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. எனினும், மூன்றாவது ஆண்டாக, 18 இந்திய குடும்பங்கள், இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், ‘விப்ரோ’ நிறுவனர், அசீம் பிரேம்ஜியின் குடும்பம், 11வது இடத்தில் உள்ளது. இதையடுத்து, இந்துஜா, 12, மிட்டல், 14, மிஸ்திரி, 16 மற்றும் பிர்லா குடும்பம், 19 என்ற இடங்களை பிடித்துள்ளன.

Share This Post

Post Comment