சமீப காலமாகவே கனடிய சில்லறை வர்த்தகத் துறையில் அமெரிக்க நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் கனடாவில் அமெரிக்கக் கடைகள் புற்றீசல் போல பெருகி வருகிறது. அமெரிக்காவின் சந்தை நிலவரம் இன்னமும் சரிவு நிலையிலிருந்து எதிர்பார்த்த அளவிற்கு மீளவில்லை என்பதால் பணத்தை சேமிக்க விரும்பும் அமெரிக்கர்கள் முதலீடு செய்து தொழில் தொடங்க ஏற்ற இடமாக கனடாவையே குறி வைக்கின்றனர்.
சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர்களுக்கு எளிதில் மாற்றிக் கொள்ளக் கூடிய இடமாக கனடா இருப்பதே இதற்கு காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பல அமெரிக்கா வர்த்தகர்களுக்கு அமெரிக்காவில் அந்நிறுவனம் பெற்ற வெற்றியை கனடாவில் தக்க வைக்க முடியவில்லை என்பதே உண்மை. இருப்பினும் கனடாவில் தொழில் புரிவதில் அமெரிக்கர்கள் அதிக ஆர்வம் காட்டியே வருகின்றனர்.
குறிப்பாக கனடாவின் பிற பகுதிகளை விட ரொறொண்டோ மாநகரப் பகுதிகளில் 24 சதுர அடி கடைகளுக்காக ஒதுக்கப்படுவதால் அதிகப்படியானோர் இதனையே தேர்வு செய்கின்றனர் எனபதும் தெரிய வருகிறது. பிற பகுதிகளில் 14 சதுர அடியே கடைகளுக்காக ஒதுக்கப்ப்படுகிறது.