குடியரசு தினம்: சென்னை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு

ekuruvi-aiya8-X3

Jan26_airportகுடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இன்று (வியாழக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாட்டத்தை தீவிரவாதிகள் சீர்குலைக்க திட்டமிட்டு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதன்படி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் இறுதி வரை ஒரு மாதத்துக்கு விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படையினர், பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டு பாதுகாப்பு பணி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்தின் உள் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா உதவியுடன் மத்திய தொழிற்படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் நுழைவு பகுதியில் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் போலீசார் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

விமான நிலைய உதவி கமிஷனர் விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமான நிலையத்துக்குள் சந்தேகத்திற்கிடமாக ஏதாவது பொருட்கள் இருந்தால் அதை பற்றி உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Share This Post

Post Comment