மன அழுத்தத்தை போக்க சவப்பெட்டி சிகிச்சை ?

உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.கீவ் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நபர் ஒருவர் சவப்பெட்டியில் வைத்து சிலரை உயிரோடு புதைத்துள்ளார்.அவரருகில் 12 காலியான சவப்பெட்டிகள் இருந்துள்ளன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து விசாரித்து போது தான் புதைத்த நபர் சைக்காலஜி மருத்துவர் என்பதும் இந்த விடயத்தை தன்னுடைய நோயாளிகளுக்கு அவர் தொடர்ந்து செய்வதும் தெரியவந்தது.

Coffin-treatmentஅதாவது, சவப்பெட்டியில் படுக்க வைத்து இரண்டு மணி நேரத்துக்கு நோயாளிகள் புதைக்கப்படுகிறார்கள். பெட்டியில் சிறிய ஓட்டை போட்டு ஒரு பைப் சொருகப்படுகிறது. இதன் மூலம் சவப்பெட்டியில் இருப்பவர்கள் சுவாசிக்க முடியும்.

இரண்டு மணி நேரங்கள் கழித்து வெளியில் வந்தால் தங்களின் மனது புத்துணர்ச்சி பெற்று புதுமனிதர்களாக மாறிவிடுகிறோம் என நோயாளிகள் கூறுகிறார்கள். இந்த விடயத்தில் முறைதவறிய செயல்கள் எதுவும் பின்பற்றப்படாத நிலையில் போலீசார் குறித்த மருத்துவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.


Related News

 • கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி
 • ஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்
 • கண்களை பாதுகாக்க சில எளிய யோசனைகள்
 • காபி குடிப்பது கல்லீரலுக்கு நல்லதா?
 • கொசுவினால் ஏற்படும் கொடிய நோய்கள்
 • மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட மேலாடையின்றி செரீனா வில்லியம்ஸ் பாடல்
 • பிணத்துக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்
 • மன அழுத்தத்தை போக்க சவப்பெட்டி சிகிச்சை ?
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *