தேசிய அளவிலான விவாதத்திற்கு வழிவகுத்துள்ள அகதி உரிமை கோரும் ஈழத்தமிழர் விவகாரம்
Mar 30 2012 06:05:28
கடந்த ஆண்டு கனடாவை வந்தடைந்து பெரும் பரபரப்பைஏற்படுத்திய எம்.வி.சன் சீ மற்றும்
அதற்கு முன்னர் வந்த ஓசன்லேடி கப்பல்களில் பயணித்த மக்கள் அகதிகளாக கனடிய குடி வரவுத் துறையால் இன்னமும் அங்கீகரிக்கப்படாததற்கு காரணம் மற்றும் இதற்கு கனடிய குடிவரவுத் துறையினர் அளித்துள்ள விளக்கத்தை குளோபல் நியூஸ் என்னும் கனடிய ஊடகம் வெளியிட்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள கனடாவிற்கு வந்த தமிழர்களுக்கு தீவிரவாதிகள் என்ற அடைமொழி தேவைதானா? இந்தக் கப்பல்களில் ஈழத் தமிழர்களை ஏற்றி வந்தோர் மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக கனடா கூறி வந்தாலும் அதற்காக அப்பாவி தமிழ் மக்களின் அகதி கோரிக்கைகளை புறந்தள்ளுவது ஏன் என்பது உள்ளிட்ட பலவேறு வினாக்களுக்கு குடிவரவுத் துறை அளித்த விளக்கங்களும் காணொளியில் இடம்பெற்றுள்ளன.
புகலிடம் நாடி வரும் மக்களுக்கு கனடாவில் அகதி உரிமை வழங்கப்பட்டு வருவதை காரணம் காட்டியே சமீப காலங்களாக அதிகப்படியான போலியான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் , மேலும் இந்த கப்பல்களில் வந்திறங்கியோர் பலருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக கனடிய குடிவரவுத் துறைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கனடிய குடிவரவுத்துறை விளக்கமளித்துள்ளது. மேலும் எதிர்காலங்களில் இது போன்ற போலியான அகதி விண்ணப்பங்களை தடுத்து நிறுத்த குடிவரவுத் துறை திட்டவட்டமாக முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான தீவிர நடவடிக்கைகளை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
அதே நேரத்தில் ஒன்றுமறியாத அப்பாவித் தமிழ் மக்கள் பலரிடம் கனடிய குடிவரவுத்துறை இரக்கம் காட்டாமல் இருப்பது கனடா நாட்டிற்கே அவமானம் என முக்கியஸ்தர்கள் சிலர் கருத்து கூறுவது போலவும் இந்த காணொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கனடாவில் படமாக்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி வெளியாகவிருக்கும் லெனின்.எம்.சிவத்தின் இயக்கத்தில் புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும்கலைஞர்களினால் உருவான A Gun & A Ring என்ற தமிழ்த் திரைப்படம்
தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
பிரோம்ட்டனுக்கு வடக்கே போகல் சாலையில் நேற்று காரொன்று பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. இதில் Ford F-350 காரில் பயணம் செய்த கோபிநாதன் தங்கவேலு, 40 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சிரியா தொடர்பான விவகாரங்களில் ஜி-8 நாடுகள் கடும் சவால்களைச் சந்தித்து வருவதால் இது தொடர்பில் முடிவெடுக்கு வகையில் ஜி-8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இரண்டு நாள் மாநாடு ஒன்று வடக்கு அயர்லாந்தில்
பல ஆயிரக்கணக்கான கனடிய மக்களுக்கு வரியில்லா சேமிப்புக் கணக்குகளின் விதிமுறைகள் சரிவரத் தெரிவதில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை தெரிந்து கொள்வதில் மக்கள் பலர் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றனர்
கடந்த சனிக்கிழமை லிட்டில் இத்தாலி என்றழைக்கப்படும் இத்தாலிய தெரு விழாவில் கலந்து கொண்ட மாநகர முதல்வர் றொப் போர்ட் மீது பெண்மணியொருவர் பழச்சாற்றினை வீசி எறிந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே
தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 அன்று இழந்துவிட்டது. இவரின் இரங்கல் நிகழ்வு கனடாவில் நடைபெறும் விபரம் பின்வருமாறு.
ஹார்மொனி ஹால் தொண்டு நிறுவனம் மூலமாக தன்னார்வத் தொண்டாற்றியவர்களின் சேவையைப் பாராட்டி தன்னார்வத் தொண்டர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.