ஆளுநரின் மனைவியையும் மகளையும் கைது செய்ய உத்தரவிட காரணம்

ekuruvi-aiya8-X3

rohitha_bogollagama_governorகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவியையும் மகளையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 06ம் திகதி கொழும்பில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பெண் ஒருவரை அச்சுறுத்தி தாக்குதல் நடத்த முற்பட்டதாக ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளுக்கு எதிராக கருவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்புபிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்ததுடன், இன்று அந்த வழக்கிற்காக இருவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜராகி இருக்கவில்லை என்று எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

இதன்போது பாதிக்கப்பட்ட பெண் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் ரோஹித போகொல்லாகமவின் மனைவி தொலைபேசி ஊடாக முறைப்பாட்டாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தினார்.

விடயங்களை கருத்திற்கொண்ட நீதவான் இரண்டு சந்தேகநபர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வழக்கு மீண்டும் எதிர்வரும் 22ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment