ரூபாய் நோட்டு அச்சிடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது: ரிசர்வ் வங்கி

banks-RBIதேவையை பூர்த்தி செய்ய புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, முழுவீச்சில் நடந்து வருகிறது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், அந்த நோட்டுகளை விரைவாக திரும்பப் பெற்று, புதிய நோட்டுகளை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பு, வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்த சில மணி நேரத்தில், அவை ஏ.டி.எம்.களில் இருந்து திரும்பப் பெறப்பட்டன.
மேலும், அந்த அறிவிப்பு வெளியான மறுநாளில் இருந்து செல்லாத நோட்டுகளை மாற்றி கொடுத்தல், ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகளை நிரப்புதல், அதுதொடர்பான தொழில்நுட்ப மாற்றம் செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
புதிய ரூபாய் நோட்டுகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அச்சகங்கள், முழு திறனுடன் முழுவீச்சில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வருகின்றன. எனவே, ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.
நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில், எல்லா மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளும் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து அனைத்து வங்கி கிளைகளும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகள் ஒருபுறம் இருக்க, பொதுமக்கள் பண பரிவர்த்தனைக்கான மாற்று வழிகளான கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, மொபைல் பேங்கிங், இணைய வங்கி ஆகிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி செய்தால், வங்கி கிளைகளுக்கு சுமை குறையும்.
ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, டெபிட் கார்டு வழங்கப்பட்டவர்கள், அதை பயன்படுத்துமாறு வலியுறுத்துகிறோம். இத்தகைய பயன்பாடுகள், காகித நோட்டுகள் மீதான நெருக்கடியை தணிப்பதுடன், டிஜிட்டல் உலகத்தில் வாழும் அனுபவத்தை அதிகரிக்கும்.
செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள டிசம்பர் 30-ந் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, போதுமான கால அவகாசம் இருப்பதால், வங்கி கிளைகளுக்கு தேவையற்ற நெருக்கடியை உண்டாக்க வேண்டாம்.
மேலும், ரூபாய் நோட்டு மாற்றுதல் சேவை தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க, ரூபாய் நோட்டுகள் மாற்றுவது தொடர்பான தகவல்களை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Related News

 • எங்களின் பலம் தெரியப்படுத்த வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -சரத்குமார்
 • கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்பட தாமதமாகும் -ரஜினி
 • தமிழகம், கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
 • சபரிமலையில் 200 பேர் மீது வழக்கு – போலீசார் குவிப்பு
 • ராம் லீலாவில் ராவணன் வேடம் அணிந்தவரும் ரெயில் விபத்து பலி
 • விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
 • சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு
 • சபரிமலைக்குள் செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா – போலீஸ் மீது அரசு காட்டம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *