ரவிகரன், அன்ரனி ஜெகநாதனையும் நீக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மிரட்டல்!

ekuruvi-aiya8-X3

antony-jeganathan-200-newsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வன்னி மாவட்டத்தைப் புறக்கணித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து வருவதாகவும், இதனால் பிரதேசவாதக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நிலை தொடர்ந்தால் பாரிய பிரச்சனைகள் வெடிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

தமிழ்த் தலைமைகள் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளால் விடப்படும் இந்தத் தவறுகளை சுட்டிக்காட்டும் என்னையும், ரவிகரனையும் கட்சியிலிருந்து நீக்கப்போவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment