இதோ ஐஸ்கிரீம் திரைக்கு வருகிறது – மனம்திறந்து , அழைக்கின்றார் அன்புடன்,ரவி அச்சுதன்

Facebook Cover V02

10 திரைப்படங்கள். கனவு போலவே இருக்கிறது. ஐஸ்கிரீம் 10வது படமாக வெளிவருகிறது. பலபேரின் உழைப்பு, இன்று நிஜமாகிறது. கனேடிய இளம் கலைஞர்களது நடிப்பாற்றல் பிரமிக்க வைக்கிறது. அவர்களது ஒத்துழைப்பு ஒரு பெரிய விருட்சமாகியிருக்கிறது.

  ravi-atchuthan-ekuruviஎன்னைப் பொறுத்தவரை சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கான, பார்ப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய அற்புதமான ஊடகம். சினிமாவை சினிமாவாக எடுத்தால் மட்டுமே மக்கள் அதை ரசிப்பார்கள். அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகில் நிறுததி ஒருவரை ரசிக்க வைக்க சினிமாவால் முடியாத போதுதான் நாம் isreamதோற்றுவிடுகிறோம். மன நிம்மதிக்காக தன் துன்பங்களை மறக்க ஒருவன் திரையரங்கிற்குள் வந்தால், அவனை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்ப வேண்டியது ஒரு சினிமாவின் கடமையாகிறது. அதை விட்டு அவனை இன்னும் வேதனைபட வைக்கும் சினிமாவை எனது மனம் ஏற்க மறுக்கிறது. முடிந்தவரை ரசிகனை விரும்பப் பண்ணக்கூடிய சினிமாவை தரவே நான் விரும்புகிறேன். ஆனால் மேதாவித்தனமான சினிமாவை எடுக்கவில்லை என்பதற்காக என்னை இயக்குநர் அல்ல என கேலி செய்பவர்களைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. மசாலாத்தனங்கள் கொண்ட பொழுதுபோக்கு (Entertainment)  சினிமாவின், ஆளுமை 80 வீதமானவர்களுககு பிடித்திருக்கிறது என்பதன் புள்ளி விவரங்கள் எமக்கு காட்டுவதும் இதைத்தான்.

திரையில் ஒரு சினிமாவை கொண்டு வரும் இயக்குநர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் செயல்படுவார்கள். இவரைப் போல் அவரில்லை. அவரைப்போல் இவரில்லை என நாம் விவாதித்துக் கொண்டிருப்போம். ஆனால், இந்த உலகில் அனைத்து விதமான சினிமாவையும் இயக்குநர்களையும் யாரோ ஒருவருக்கு பிடித்துக் கொண்டு தான் இருக்கிறது. ravi-atchuthan

எனக்கு மிகவும் பிடித்தது, ஜனரஞ்சகமான சினிமா தான். எனது சினிமாவுக்கு நானே முதல் ரசிகன். எனது இயக்கும் திறன், ஒளிப்பதிவில் நான் காட்டும் உழைப்பு இவையெல்லாம் முதலில் எனக்குப் பிடித்திருக்கிறது. அது தான் என்னை நகர்த்திச் செல்கிறது. எனது படைப்புக்களை ரசிப்பதற்கும் ஒரு ரசிகர்  பட்டாளம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. புலம்பெயர்ந்து வாழும் எங்களுக்கும் சினிமா என்று ஒன்றை சொல்ல உரிமையிருக்கிறது. திறமையிருக்கிறது என்று துணிந்து சொல்ல இதோ ஐஸ்கிரீம் திரைக்கு வருகிறது. உங்களை மகிழ்ச்சிப்படுத்த எனக்குக் கிடைத்த இன்னுமொரு சந்தர்ப்பம் கைகூடி வந்திருக்கிறது. இந்தத் திரைப்படம் திரையங்கிற்கு வரும் உங்களை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்பவும் என்பதில் எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கிறது.

ravi-atchuthan-1235_a copyநவம்பர் 5ம் திகதி பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த போது, எங்கள் ஊடகங்கள் தந்த ஆதரவு மெய்சிலிர்க்க வைத்தது. படத்தின் வெளியீடு வரை அவர்களின் அரவணைப்புக்கு முக்காட வைக்கிறது. விளம்பர ஆதரவு தந்த அனைத்து வர்த்த பிரமுகர்களையும் நன்றியோடு பார்க்கிறேன். OHM நிறுவனம் Title Sponsor அவர்களின் பாரிய ஆதரவு என்னை இன்னும் வேகமாக எழுந்து நிற்க வைத்திருக்கிறது. கதை எழுதிய அருண் சிவகுமாரன், படத்தொகுப்பு செய்த RT பாலா AVM, இசையமைத்த இளங்கோ கலைவாணன், வர்ணத்தை அழகாக்கிய விநாயகம், சண்டைப்பயிற்சி சுதன் மகாலிங்கம், பழனி, திருநெல்வேலி செந்தில், அகிலன், ரவிப்பிரயன், எஸ்சி போய்ஸ் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

 இந்த திரைப்படம் யோர்க் சினிமாவில் டிசம்பர் 3ம், 4ம் திகதிகளில் 4.30 மற்றும் 7.30 மணி காட்சிகளாக காண்பிக்கப்பட இருக்கிறது. உங்கள் அனைவரின் வருகையும் எங்கள் வளர்ச்சிக்கு இன்னும் வலுச்சேர்க்கும். எதிர்காலத்தில் இன்னும் நிறைய திரைப்பட தயாரிப்பிற்கு வழிவகுக்கும்.

 அன்புடன்,

ரவி அச்சுதன்

கனடாவில் வெளிவரும் இகுருவி (டிசம்பர் 2016) பத்திரிகைக்காக ரவி அச்சுதன் அவர்களால் 30 நவம்பர் 2016 அன்று எழுதியது

Share This Post

Post Comment