முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினரால் செயற்கை கால்கள் அன்பளிப்பு

Thermo-Care-Heating

1473412904_p1யுத்தத்தால் தங்களுடைய கால்களை இழந்த முன்னாள் போராளிகள் மற்றும் சில பொது மக்களுக்கு இராணுவத்தினரால் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஒத்துழைப்பு மையத்தில் இடம்பெற்றது.

அமெரிக்காவின் யு.எஸ் எய்ட் உதவியுடன் கண்டி குண்டகசாலை மாற்று வலுவுள்ளோர் நிலையத்தின் அனுசரணையில் கிளிநொச்சி இராணுவத்தினரால் 28 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருடன் நேரடி யுத்தம், மிதிவெடி போன்ற காரணங்களினால் தங்களுடைய கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும் மற்றும் சில பொது மக்களுக்கும் இவ்வாறு செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளைத்தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான செயற்கை கால்களை வழங்கி வைத்தார்.

ideal-image

Share This Post

Post Comment