நிலச்சரிவில் இருந்து 200 பேரை மீட்ட ராணுவம்

sdsd

Arunachal3._L_styvpfஇந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்துவந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் பலுக்பாங் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனையடுத்து பலுக்பாங்க் பகுதியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் மக்கள் தங்களது வாகனத்தில் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக எந்தவித உதவியும் காத்துக்கிடந்தனர். அவர்களுக்கு சாலை இணைப்பு தடைபட்டது.

Arunachal-Pradesh-Indian-Army-rescues-over-200-peopleபின்னர், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் ராணுவ வீரர்கள் மருத்து உதவி பொருட்களுடன் விரைந்தனர்.

பலுக்பாங் பகுதியில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்களை ராணுவ வீரர்கள் அபாயகரமான ஆற்றுப் பாலங்களின் வழியாக காப்பாற்றினார். அதில், 70 பெண்கள் மற்றும் 50 குழந்தைகள் அடங்குவர்.

பின்னர், மக்களுக்கு மருத்துவ மற்றும் உணவு பொருட்களை ராணுவ வீரர்கள் வழங்கினர். மேலும், சாலைகளை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Share This Post

Post Comment