கேரள மாநிலத்தில் மலையாளத்தை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை – பினராயி விஜயன்

Facebook Cover V02

pinaray_vijayanகேரள மாநிலம், கண்ணூரில் நேற்று நடந்த அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதல்–மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘மலையாளத்தை அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக ஆக்குவதற்கான துணிச்சலான நடவடிக்கையை இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு எடுக்கும்’’ என அறிவித்தார்.

அதே நேரத்தில் சிறுபான்மையினருக்காக கல்வித்துறையில் தமிழ், கன்னட மொழிகள் தொடரும் எனவும் அவர் கூறினார்.

இருப்பினும், தமிழ், கன்னட மொழிகளை கற்பிக்கிற பள்ளிக்கூடங்கள், பிராந்திய மொழியாக மலையாளம் இருப்பதால், அதையும் கற்றுத்தர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பினராயி விஜயன் தொடர்ந்து பேசும்போது, ‘‘கேரளாவில் அரசுப்பணி பெறுவதற்கு மலையாள மொழி அவசியம்’’ எனவும் கூறினார்.

Share This Post

Post Comment