எனக்கும், அமைச்சர்களுக்கும் சிறிசேனா நெருக்கடிகளை ஏற்படுத்தினார் – ரணில்

இலங்கை அரசியலில் உச்ச கட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரதமர் அலுவலகம் சென்ற ராஜபக்சே தனது அலுவல் பணிகளை துவங்கினார். இலங்கையின் 22-வது பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார்.
இந்தநிலையில், எனக்கும், அமைச்சர்களுக்கும் அதிபர் சிறிசேனா நெருக்கடிகளை ஏற்படுத்தினார் என்று ரனில் விக்ரமசிங்கே பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக ரனில் விக்ரமசிங்கே கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத ஒருவரை பிரதமராக தேர்வு செய்தது வெட்கபட வேண்டியது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவரே பிரதமர் என இலங்கை அரசியலமைப்பில் உள்ளது.
எனக்கும், அமைச்சர்களுக்கும் அதிபர் சிறிசேனா நெருக்கடிகளை ஏற்படுத்தினார். தான் செய்த தவறை மறைக்க சிறுவர்கள் கூட நம்பாத கதைகளை தற்போது கூறுகிறார் சிறிசேனா. தற்போது நடைபெறும் சம்பவங்களில் இலங்கை வரலாற்றில் சட்டவிரோத செயல்பாடாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related News

 • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
 • மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்
 • இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது
 • உலகின் உயரமான வல்லபாய் படேல் சிலைக்கு நிதியுதவி வழங்கியது யார்?
 • ஆயுதங்களை பயன்படுத்தாத சதிப்புரட்சியே இலங்கையில் அரங்கேறுகிறது – சபாநாயகர்
 • புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டது
 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க கடுமையாக உழைப்பேன் – டக்லஸ்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *