நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை அமுல்படுத்த வலியுறுத்தி எதிரணியின் மேதின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும்; தமிழ்க் கூட்டமைப்பும் பங்கேற்பு
Apr 06 2012 02:47:16
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென்ற வலியுறுத்தல் உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து எதிரணியின் மேதினக்கூட்டமும் பேரணியும் யாழ்ப்பாணத்தில் இம்முறை இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதில் பங்கேற்க இணங்கியிருப்பதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேதினம் அனுஷ்டிப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வியாழன் முற்பகல் ஒன்று கூடி 1 1/2 மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா ,மங்கள சமரவீர ,ஜோன் அமரதுங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் , பொது செயலாளர் மாவை சேனாதிராஜா, ஜனாநாயக மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், ஐக்கிய சோஷலிச கட்சித் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, நவசமசமாஜ கட்சி பொதுச் செயலாளர் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்ண ஆகியோர் பங்குபற்றினர்.
இதன் போது மேதினக் கூட்டம் மற்றும் பேரணிகளுக்கான ஒழுங்குகளை செய்வதற்கான பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் எந்தவொரு தனிப்பட்ட கட்சியினுடைய மேடையாக அன்றி அனைத்து கட்சிகளின் மேடையாக அவற்றின் வர்ணக்கொடிகளுடன் இடம்பெறும் வண்ணம் அமையவும் கூட்டத்தின் போது இணக்கம் காணப்பட்டது.
எனினும் ஊர்வலத்தில் தமிழ்க் கட்சிகளினதும் தமிழ் தொழிற்சங்கங்களினதும் வர்ணக் கொடிகளைக் கொண்டு வரலாமெனவும் இணக்கம் எட்டப்பட்டதுடன் இடம்பற்றி உடனடியாக தீர்மானம் இக்கூட்டத்தின் போது முடிவு எட்டப்பட வில்லையென அவ்வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அதாவது யாழ்.மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வசம் உள்ளதால் யாழ்நகரிலோ அல்லது மாநகர சபை எல்லைக்குள் நடத்துவதற்கு சிக்கலானது என்ற அடிப்படையில் கூட்டமைப்பு வசம் உள்ள பிரதேச சபைகளில் இடத்தில் நடத்துவதெனவும் முடிவு எட்டப்பட்டதாக தெரியவருகின்றது.
இம்மேதினத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை காலதாமதமின்றி அமுல்படுத்த வேண்டுமெனவும் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றுவதற்கு குறிப்பிட்ட கால எல்லைக்குள் துரித நடவடிக்கையெடுக்க வேண்டுமென்பதுடன் அடிப்படை சம்பளமாக 12,500 வழங்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியே நடத்துவதென இதன் போது முடிவு எட்டப்பட்டது.
இதேவேளை ஊர்வலத்தில் தாங்கவுள்ள பதாகைகள் குறித்து மீண்டும் பேசுவதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
Sep 11 2012 08:13:30 [Tamil]
தமிழர்களின் தெய்வமாகிய நல்லூர் கந்தன் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி 25 நாட்கள் சீரும் சிறப்பமுமாக நடந்து முடிந்தது. விழாவின் முக்கிய நாளான 24 ஆம் நாள் தேர் திருவிழாவின் போது பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க நல்லூர்க்கந்தன் தேரில் எழுந்தருளி வலம் வந்தார்.
Read More >
Sep 09 2012 09:54:52 [Tamil]
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னராக ஆட்சியமைப்பு குறித்த பேரம்பேசல்களில் ஐ.ம.சு.கூ, த.தே.கூ மற்றும் மு.கா உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற நிலையில்; இந்த தேர்தலில் 'பிள்ளையானின்' வகிபாகம் குறித்து சில பார்வைகள்.
Read More >
Sep 08 2012 13:39:39 [Tamil]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 ஆசனங்களும்
Read More >
Sep 04 2012 10:36:38 [Tamil]
இலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டு உள்ளார் தர்சினி சிவலிங்கம். நாட்டின்
Read More >
Jul 26 2012 12:18:17 [Tamil]
அஜித் நடித்து வெளியாகியிருக்கும் பில்லா 2 திரைபடம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட நாளில், அஜித்தின் அட்டை உருவத்திற்கு பாலூற்றி;க் களித்திருக்கின்றனர் யாழ்ப்பாண ரசிகர்கள்.
Read More >
Jul 07 2012 08:22:03 [Tamil]
தமிழகத்தின் ௭திர்ப்பினால் பயிற்சிகளை இடைநடுவில் நிறுத்தி இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளை திருப்பியனுப்ப இந்திய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையானது கவலையளிக்கின்றுது. ௭ன்று
Read More >
Jul 07 2012 08:13:35 [Tamil]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தமிழ் மக்களுக்கு அதிக அளவில் நன்மை செய்ய முடியும் என்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம்
Read More >
Jul 06 2012 07:56:16 [Tamil]
இரணைமடு குளத்தில் மீன்பிடி பிடிப்பதற்கு விமானப்படையினர் தடை விதித்துள்ளதால் இக்குளத்தில் மீன்பிடி தொழிலையே நம்பியிருக்கும் கிளிநொச்சி அழகாபுரி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும்
Read More >
Jul 06 2012 07:51:19 [Tamil]
யாழ். உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேம்நாத் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கவோ அது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கவோ முடியாத அளவிற்கு யாழ். நீதவான் கணேசராசாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்
Read More >