ராமதாஸ் அடியாட்கள் கொலை மிரட்டல்: தீபா முறைப்பாடு

Thermo-Care-Heating

deeba15எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் பரபரப்பு தகவல் ஒன்றை வௌியிட்டுள்ளார்.

ராமதாசின் அடியாட்கள் விடிய விடிய என்னை பெண் என்றும் பாராமல் எனது கைப்பேசிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, ஆபாசமாக திட்டி செய்திகளை அனுப்புகிறார்கள்.

அம்மாவின் வாரிசான என்னை அடியாட்கள் மூலம் நான் அரசியல் களத்திலிருந்து ஓடவேண்டும் என்று மிரட்டி பார்க்கிறார்.

நான் எந்த சல சலப்புக்கும் அஞ்சமாட்டேன் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

பசுமை தாயகம் என்ற பெயரில் தனது மகனை வைத்து மரம் வளர்ப்போம் என்று ஒரு அமைப்பை தொடங்கி விட்டு, வட மாவட்டம் முழுவதும் பல ஆயிரக் கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்த கூட்டம் தான் டாக்டர் ராமதாஸ் கட்சி.

ஊழல் பற்றி உலகம் அறிய பேசும் ராமதாஸ் தனது மகன் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது முறை கேடாக நடந்து கொண்ட ஊழல் வழக்கிற்கு நீதி மன்ற நெடிய படிக்கட்டுகளை ஏறி இறங்குவதை ஊடகங்கள் வாயிலாக நாடு பார்த்து கொண்டு இருப்பதை மறந்து பேசி வருவது வேடிக்கையானது.

கூட்டணி என்ற பெயரில் சீட்டுக்களைப் பெற்று போயஸ் தோட்டத்திற்கும் கோபாலபுரத்திற்கும் நடையாய் நடந்து பிழைப்பு நடத்திய பா.ம.க கூட்டம் தனித்து நின்று அரசியல் செல்வாக்கை நிரூபிக்க வில்லை. ஜாதி கலவரத்தை தூண்டியதால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

மகனை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து நாடு முழுவதும் பா.ம.க. டெபாசிட் தொகை இழந்த கதையை ராமதாஸ் மறந்து பேசுகிறார் ? திராவிட கட்சியின் தயவால் எம்.பி. எம்.எல்.ஏக்களை பெற்ற பா.ம.க. தனித்து நின்று ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாததுக்கு காரணம் என்ன?

மக்களால் நிராகரிக்கப் பட்ட அமைப்பு தான் பாமக. இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறுவதும் இரட்டை இலை இருந்தால் நிரந்தரமாக எந்த ஜென்மத்திலும் பாமக வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தின் காரணமாகவும் முடக்க வேண்டும் என்ற வேற்று கோசத்தை ராமதாஸ் எழுப்பி வருகிறார்.

தற்போது அம்மாவின் அரசியல் வாரிசாக பெரும் மக்கள் சக்தியுடன் வலம்வரும் என்னை அரசியல் களத்தில் இருந்து விரட்டவேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, என் அரசியல் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து வருவதை பொறுக்க முடி யாமல் என் கைபேசிக்கு ராமதாசின் கூலிப்பட்டாளம் இழிவாக பேசியது வருத்தம் அளிக்கிறது.

அனைத்தையும் பதிவு செய்திருக்கின்றேன். அதே போல் ராமதாசின் அடியாட்கள் பட்டாளம் எனக்கு எழுதி அனுப்பிய குறுஞ் செய்திகளையும் பதிவு செய்துள்ளேன்.

ideal-image

Share This Post

Post Comment