3-வது நாளாக முடங்கியது பாராளுமன்றம் – அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு

ekuruvi-aiya8-X3

Speaker-Sumitra-Mahajanபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, சிலைகள் உடைப்பு, காவிரி விவகாரம்,  ஆகிய பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால், பாராளுமன்ற  நடவடிக்கைகள் 3 வது நாளாக பாதிக்கப்பட்டன.
மாநிலங்களவை  இன்று கூடியதும் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாட்டின் பல்வேறு இடங்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அதிமுக எம்.பி.,க்களும், சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்குதேச கட்சி எம்.பி.,க்களும், பஞ்சாப் நேஷனல் வங்கி பிரச்னையை மற்ற கட்சி எம்.பி.,க்களும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவையிலும்  தெலுங்குதேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், அதிமுக எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் தொடங்கிய போது, எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால், நாள் முழுவதும் மக்களவை  ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை அமளி தொடர்வதை முடிவுக்கு கொண்டு வர பிற்பகல் 1 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

Share This Post

Post Comment