சுகாதார அமைச்சின் அதிரடி தீர்மானம் – வைத்தியர்களுக்கு சம்பளம் இல்லை

இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இடங்களில் பணிக்கு செல்லாத வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களுக்குறிய சம்பளத்தை இடைநிறுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

போசாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதாரச் செயலாளர் பீ.ஜீ.எஸ். குணதிலகவிற்கு இவ்வாறு அறுவுறித்தியுள்ளார்.

rajithaஅவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை அவர்களுடைய பழைய பணி இடத்திலிருந்து விடுவிக்காத வைத்தியசாலை பணிப்பாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் வைத்தியாசலைகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியுதவிகளை இடைநிறுத்தவும், வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது நிர்வாக திறமைகளுக்கு புள்ளி வழங்கும் போது இதுதொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரின் தலைமையில் நரஹேன்பிட்டி தேசிய இரத்த பரிமாற்ற மையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.






Related News

  • மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்
  • இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்
  • புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்
  • விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி
  • துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்
  • இரண்டாவது நாளாகவும் CIDயில் ஆஜரான நாலக டி சில்வா
  • கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்
  • மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *