ராஜபக்ஸக்களுக்கு எதிராக மேலும் 58 மோசடி விசாரணைகள்

Thermo-Care-Heating

Mahinda family New1முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக மேலும் 58 மோசடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் விசேட காவல்துறை விசாரணைப் பிரிவு ஆகியனவற்றினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த இரண்டு விசாரணைப் பிரிவுகளையும் அண்மையில் சந்தித்த போது இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, விசேட காவல்தறை விசாரணைப் பிரிவு மற்றும் குற்றவியல் விசாரணைப் பிரிவின் விசாரணைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

493 சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி விசாரணைப் பிரிவு ஆகியனவற்றை இணைக்கும் வகையில் புதிய சட்டமொன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ideal-image

Share This Post

Post Comment